பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்திற்கு பயனர்கள் நன்கொடை வழங்குவதை முடக்கும் வகையில் இஸ்ரேல் அரசு ‘கூகுள்’ விளம்பரங்களை வாங்குவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

‘நிறுவனத்தின் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் அதன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி ‘எக்ஸ்’ சமூகதளத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூகுள் விளம்பரங்களை வாங்கும் இஸ்ரேல் அரசு, குறித்த ஐ.நா. நிறுவனத்திற்கு ஹமாஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது போன்ற விளம்பரங்களை வெளியிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

‘பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தை அகற்றுவதற்கு பெரும் சக்திமிக்க பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது’ என்று அந்த நிறுவனத்தின் அமெரிக்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மாரா கிரொனன்பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை அடுத்து அகதிகளாக்கப்பட்ட பலஸ்தீனர்களுக்கு உதவுவதற்கு 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பலஸ்தீன அகதிகளுக்கான அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நீண்ட காலமாக பிரசாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here