கடந்த சில காலமாக பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (27.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணகி நகர் பகுதியில் உறவினரின் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் கொட்டும் மழையில் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண் அணிந்திருந்த தாலியினை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட வேளை இருவருக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் இரண்டு திருடர்களில் ஒருவரது தொலைபேசி அந்தப் பெண்ணிடம் அகப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தாலியுடன் தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தற்கு அமைவாகவும் தொலைபேசியில் உள்ள விவரங்களுக்கு அமைவாகவும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரிடமிருந்து பெண்ணிடமிருந்து அபகரிக்கப்பட்ட தாலி, 1 தொலைக்காட்சி பெட்டி, 1 தொலைபேசி, 6 தண்ணீர் பம்பிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலும், ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், தலைமறைவாகி உள்ள சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தர்மபுரம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

- கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்








