நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு காரணமாக இன்று (14/1/2025) பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொது மக்கள் சிவப்பரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.
மேலும் மலையகத்தில் அதிக வீடுகளில் இன்று (14/1/2025) காலை சூரிய பொங்கல் வைப்பதற்காக வெள்ளை அரிசியை பயன்படுத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து மழையுடனான சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும் மக்கள் தை திருநாளை கடந்த வருடங்களை விட ஓரளவு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக பொங்கலுக்கு பயன்படுத்தும் தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








