பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சாவை என்.சி போதைப்பொருளில் கலந்து விற்பனை செய்த பெண்ணொருவர் (56) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி போதைப்பொருளை சிறிய பொதிகளில் அடைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.

இந்நிலையில், சந்தேக நபரின் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த என்.சி என்ற போதைப்பொருளின் சிறிய பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.850 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here