இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்திய இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் மோடி இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், தனது நாடு கடுமையாக பதிலடி கொடுக்கும் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.








