பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26.07) அறிக்கை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாணிற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், விலை குறைக்கப்படுமா இல்லையா என நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.








