Saturday, June 6, 2026
No menu items!

அகில இலங்கை

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு; பேக்கரி உரிமையாளர்கள்!

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில், உப்பு பிரச்சினை குறித்து அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. நாங்கள் அமைச்சருக்கும் இது குறித்து அறிவித்திருக்கிறோம். அமைச்சர் தேவையான அளவு உப்பு வழங்கப்படும்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஐந்து பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஐந்து பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளனர். இதேவேளை உயிரிழந்த சரித் டில்சான் என்ற மாணவனின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆழமான...

வெள்ளிப் பதக்கம் வென்ற புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவி..!

அகில இலங்கை ரீதியில் பௌதீகவியல் ஒன்றியத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட இளையோர் அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் புத்தளம் பாத்திமா கல்லூரியின் சாதாரண தர மாணவி எம்.எச் அயிஷா அனத் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கான பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் மாதலி ஜெயசேகர இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்...

தேங்கியுள்ள கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள்!

1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைத் தெரிவித்துள்ளார். இதுதவிர, சீ.ஐ.சீ.டீ தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் 400 கொள்கலன் தாங்கிகள் தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொள்கலன்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது வாக்கினை பதிவு செய்தார்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் இன்று காலை (14) பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். மன்னார், தாராபுரம், அல் மினா மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில், அவர் தனது குடும்பத்தினர் சகிதம் வாக்குச் செலுத்தினார்.

சஜித் பிரேமதாசவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு!

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது  சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற...

பாண் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!

பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26.07) அறிக்கை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாணிற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், விலை குறைக்கப்படுமா இல்லையா என நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும்...

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட முஸ்லிம் கலாச்சார போட்டி!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட முஸ்லிம் கலாச்சார போட்டியானது நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் Mrs. S .குலேந்திர குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் ஏனைய மாவட்ட  வலயக்கல்வி பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் இந்...

சுகாதார சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது!

இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று நண்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் சமந்த கோரளேராச்சி தெரிவித்துள்ளார். மருத்துவமனை ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் பணி, பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களுக்கு கடுமையான நடைமுறை, போக்குவரத்துக் கொடுப்பனவு உள்ளிட்ட...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img