இம்முறை பாதீடு மலையக மக்களை ஈர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.

எதிர்கால சந்ததியினரைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி பாதீட்டை முன்வைத்துள்ளதாக அம்பிகா சாமுவேல் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு சமூகம் மாற்றமடைய வேண்டுமாயின் கல்வியில் முன்னேற்றம் வேண்டும் எனவும் அதனைக் கருத்திற் கொண்டே அதிகளவாக கல்விக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பிகா சாமுவேல் கூறினார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here