வாடகை அடிப்படையில் கார்களை வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கொள்வனவு செய்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, அதுருகிரியவைச் சேர்ந்த 54 வயதுடைய குறித்த சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாடகை கொள்வனவு முறையின் அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து சுமார் 39 கார்களைப் பெற்றுள்ளதாக சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here