இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (16.10) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
அன்பான வரவேற்பின் பின்னர் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க தூதுவருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அண்மையில் இலங்கை விமானப்படைக்கு புதிய விமானம் ஒன்றை நன்கொடையாக வழங்கியமைக்காக அமெரிக்க தூதுவருக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், அவர்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விழாவை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி ஏர் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்டா, அமெரிக்க பாதுகாப்பு இணை அதிகாரி, லெப்டினன்ட் கர்னல் அந்தோனி நெல்சன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைவர் சிடிஆர் சீன் ஜின் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.








