இவ்வருடத்தில் ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து  18,078 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 4,504 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,495 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் 155,070 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,548,299 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில், 304,634 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும் , 140,959 சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் , 130,701 சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்தும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here