கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் விஎஸ்எவ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பிக்க ரணவக்க சுமந்திரன் ரவூப்ஹக்கீம் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு தரவுகளிற்கு ஆபத்து என்பதால் விஎஸ்எவ் நடைமுறைக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என அவர்கள் தங்கள்மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








