பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டமொன்றில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

40 வயதுடைய கெரண்டிஎல்ல பசறை பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (22.08) பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனது தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த குறித்த பெண் தேயிலை செடிக்குள்ளிருந்த பாம்பொன்று கடித்து, ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று (23.08) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மரண பரிசோதனையின் அடிப்படையில், பாம்பின் விஷம் உடலில் பரவியமையே மரணத்துக்கான காரணம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here