Saturday, July 25, 2026
No menu items!

தேசிய பட்டியல்

எம்.பியாக பதவியேற்ற நிசாம் காரியப்பர்..!

நிசாம் காரியப்பர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் தெரிவு..!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன. அதன்படி, ரவி கருணாநாயக்க கடந்த தினம் தேசிய பட்டியல் ஆசனத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில்,...

தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது; ரவி கருணாநாயக்க !

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமாக இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கலந்து கொண்டார். பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததன்புதிய ஜனநாயக முன்னணி பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார். இந்த...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக ஒருவர் தெரிவு!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை விழிப்புலனற்றோர் பட்டதாரிகளின் சம்மேளனத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, தேசிய மக்கள் சக்தியின் 18 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் மூலம் உத்தியோகப்பூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பெயரிடப்பட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு...

புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள்!

10 ஆவது பாராளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தை சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார்....

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது…!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள் பின்வருமாறு, பிமல் நிரோஷன் ரத்னாயக்க டொக்டர். அனுர கருணாதிலக்க உபாலி பன்னிலகே எரங்க உதேஷ் வீரரத்ன அருண ஜயசேகர ...

பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இணையவழி பதிவு ஆரம்பம்…!

பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இணையவழி பதிவு இன்று (17.11.2024) முதல் வரும் 20ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாகவும் குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்கு சென்று பதிவு செய்ய முடியுமெனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட...

தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானது; தர்மலிங்கம் சித்தார்த்தன்…!

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் தேசியப் பட்டியல் ஆசனமொன்றும்...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார்; ருவான் விஜயவர்தன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ அல்லது தேசிய பட்டியல் ஊடாக உள்வரவோ மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க தேசிய விடயங்களில் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் செயற்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மாபெரும்...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img