பாராளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் இன்று (அக்டோபர் 23) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாதுகாப்பு சோதனை நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உள்ளிட்ட முழு பாராளுமன்ற கட்டிடமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

நவம்பர் 7 (வெள்ளிக்கிழமை) அன்று பாராளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அன்று பொது மக்கள் பார்வையிடும் பகுதி விருந்தினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் கூறினார். விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படவுள்ளன.

அன்று அமுல்படுத்தப்படும் விசேட பாதுகாப்புத் திட்டத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் சாரதிகளுடன் மட்டுமே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அன்றைய தினம் பாராளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும், அதனால் உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வெளிப்புற நிறுத்துமிடங்களுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில், பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here