பாராளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பான கோப்புகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








