மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக   வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மரியாதையின் நிமித்தம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(17.09.2024)  மதியம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார்.

இதன் போது மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதே நேரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருகை தந்து பொது மக்களுடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் வினவிய நிலையில் இது ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே நான் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here