சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 இல் வீர வீராங்கனைகள் விளையாடி தங்களின் திறமைகளை காண்பித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கியுள்ளார்.
மனுபாகரை தற்போது அனைவரும் பாராட்டி வரும் நிலையில், இந்தியா ஒரு வெண்கலப் பதக்கம் வென்று , 22ஆம் இடத்தை தக்கவைத்துள்ளது.
கடந்த மூன்று நாட்கள் போட்டி முடிவில் பதக்க பட்டியல் நேற்றைய நாளை விட இன்று அனைவரும் எதிர்பார்ககா வண்ணம் மாறியுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதனடிப்படையில், ஜப்பான் 4 தங்கப்பதங்கங்கள், 2 வெள்ளிபதக்கம், 1 வெண்கலம் பெற்று முதல் இடத்திலும் அவுஸ்ரேலியா 4 தங்கம் 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்திலும் 3 தங்கப்பதங்கள், 6 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 12 பதக்கங்களை வென்று அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.
முறையே பிரான்ஸ், கொரியா ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிலையில், நேற்றைய தினம் (28.07) இரண்டாம் இடத்தில் காணப்பட்ட சீனா, இன்று 6 ஆறாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








