காத்தான்குடியைச் சேர்ந்த 14 வயதுடைய பெண் ஒருவர் தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்திப்பதற்காக சைக்கிளில் வந்துள்ளார்.
பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் செய்தியொன்றை கையளிப்பதற்காக பாத்திமா நடா காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கவும் இளம் மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








