அநுராதபுரம், மடாட்டுகம, கெக்கிராவ பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு லொக்கா” என்பவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மடாட்டுகம பொலிஸார் தெரிவித்தனர்.

மடாட்டுகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், கெக்கிராவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபராவார்.

சந்தேக நபரிடமிருந்து 3,220 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடாட்டுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here