புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன் பின்னர் எமது பணிகள் விரைவாக தொடங்கப்படும்.

அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கும்.

இந்த அமைச்சரவை அதிகபட்சமாக இருபத்தைந்து அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here