புஸ்ஸ சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திலும் சிறைச்சாலை வளாகத்திலும் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை, புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறைச்சாலை வைத்தியசாலை மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த உபகரணத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையில் 5 கையடக்கத் தொலைபேசி சார்ஜர்களும் 8 டேட்டா கேபிள்களும் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here