பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் அறையிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் நேற்று (08.12.2024) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, “பொடி லெசி”யின் அறையிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி, சாஜர் , 02 டேட்டா கேபிள் மற்றும் ஹெட்செட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றி சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here