பெங்களூரில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதோடு இவ் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை பெங்களூரில் சில மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மே 22 ஆம் திகதி வரை கா்நாடகத்தில் இந்த நிலை நீடிக்கும் என்பதால் கர்நாடக மாநிலத்திற்கு  மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here