பெண்களின் தொலைபேசிக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தி பெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பிய ஒருவரைக் கைது செய்துள்ளது.

சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் மூன்று பெண்கள் அளித்த முறைப்பாடைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர் உந்துருளி பழுதுபார்க்கும் கடை நடத்தி வருவதாகவும், அங்கு வரும் பெண்களின் தொலைபேசி எண்களைப் பெற்று, அவர்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் குரல் பதிவுகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 49 வயதான அனுராதபுரம் பந்துலகம பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here