வீதியைத் தடை செய்தமையின் காரணமாகப் பேருந்து ஓட்டுநர் ஒருவரைச் சிலர் தாக்கியுள்ளனர்.
காலி – மாத்தறை வீதியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஓட்டுநரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
வெளிநாட்டவர்கள் சிலரைப் பேருந்தில் ஏற்றிய போது ஏற்பட்ட வீதி தடையின் காரணமாகப் பேருந்து ஓட்டுநரை இவ்வாறு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி காலி – மாத்தறை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.








