பேருந்துப் பயணக் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்த திட்டம் இன்று உத்தியோகப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது.
புதிய முறைமையை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையேற்க உள்ளார்.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் பயணிகள் நவீன முறையில், எளிமையுடன் மற்றும் பாதுகாப்பாக கட்டணத்தை செலுத்தக்கூடிய சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






