பதுளை – பண்டாரவளை வீதியில் தோவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/03/2025) இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சக்கரமொன்றிலிருந்து காற்று வெளியேறியதால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் பயணித்த வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








