சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
குறித்த போட்டியை ஏராளமான கிரிக்கெட் இரசிகர்கள் மைதானத்துக்கு நேரில் சென்று கண்டு களித்தனர்.
அந்த வகையில் இந்த போட்டியைப் பார்வையிடுவதற்காகச் சென்னை இராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் சென்றுள்ளனர்.
இதையடுத்து குறித்த இருவரும் போட்டி நிறைவடைந்ததும் மைதானத்திலிருந்து வீடு திரும்பிய போது, அவர்கள் பயணித்த உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் உயிரிழந்த மாணவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








