Thursday, October 8, 2026
No menu items!

நேற்றிரவு

ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து; 73 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ள இஸ்லாம் காலா என்ற நகரத்துக்கு அருகில் நேற்றிரவு இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றே பாரவூர்தியொன்றுடனும் உந்துருளியொன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதியின் அதிகப்படியான வேகம்...

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலி!

 காலி - ஹினிதும – மஹாபோதிவத்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். சம்பவத்தில் ஹினிதும, அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

பேருந்தை தாக்கிய யானை!

கறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் அமைந்துள்ள கொழும்பு பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்றின் மீது யானை தாக்கிய சம்பவமொன்று நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீதே யானை ஒன்று இவ்வாறு தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. சில நாட்களாக மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.    
- Advertisement -spot_img

Latest News

சிரிலிய சவிய அமைப்பு மோசடி; நீதிமன்றில் இரு தரப்பும் விளக்கம்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், சிரிலிய சவிய அமைப்பு பெற்ற நிதி அதன் வங்கிக் கணக்கில்...
- Advertisement -spot_img