பண்டிகைக் காலத்தின் போது பொதுமக்கள் உணவு பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் இந்த காலப்பகுதியில் தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படலாம் என்பதை கருத்திற் கொண்டு பொதுமக்களை விழிப்பூட்டும் வகையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து தகவல்கள் தெரிந்திருப்பின் அது தொடர்பில் முறைப்பாடு அளிக்க முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மணம், நிறம் மற்றும் பொதுவான தோற்றம் குறித்து நுகர்வோர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதி செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்யும் போது விபரங்களை பரிசோதித்து கொள்வனவு செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here