ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (02.10) பிற்பகல் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இயலும் ஶ்ரீ லங்கா மாநாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here