எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16.10) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களின் விருப்பப்பட்டியல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை சரிபார்த்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச செலவினம் இன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here