எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

எனினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை மறுதினம் நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக இதுவரை 2,348 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் நாளை மறுதினம் கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதேநேரம், இந்த ஆண்டுக்கான தேர்தல் கண்காணிப்பில் பங்கேற்கும் ஆசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here