பொரளை, சஹஸ்புர, சிறிசர உயன பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காயமடைந்த அனைவரும் 21- 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மற்றைய நான்கு பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை, இருப்பினும் இந்த சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இன்று நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்களை குறிவைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.








