கிளிநொச்சி மயில்வாகனபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்நநிப்பில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தெரிவிக்கையில்,
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நடாத்த வேண்டிய இந்த தேர்தலை ரணில் விக்கிரமசிங்க தான் வெற்றி பெறமாட்டேன் என தெரிவித்து பணத்தை காரணம் காட்டி பிற்போட்டனர்.

இதுவரை இருந்த அரசியல் சாதாரண ஆட்கள் அரசியலுக்கு வரமுடியாத நிலை இருந்தது என தெரிவித்தார்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு இருந்த அரசியல் வாதிகள் எமக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பரப்பினர். தமிழர்களை வெட்டிப்புதைப்பார்கள், சிங்கள குடியேற்றம் வரும் அதே போல் தென்னிலங்கையிலும் இவ்வாறு தான் சொன்னார்கள் எரிபொருள் இல்லை, டொலர் இல்லை என்று. நாட்டில் ஜனநாயக புரட்சி ஏற்பட்டிருக்கிறது. பரம்பரை அரசியல் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்புள்ள தலைவராக தமிழ் மக்கள் ஜனாதிபதியை பார்க்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியை உள்ளூராட்சியில் வெற்றி பெற வைத்தால் உங்களின் உரிமையை தட்டிக்கேட்க முடியும் .
கிளிநொச்சியிலுள்ள அரசியல்வாதி அரசியலுக்கு வரும் போது முன்பு எப்படி இருந்தார். இப்பொழுது எப்படி இருக்கின்றார்.

ஆனையிறவு உப்பளத்திற்கு ரஜ லுணு என்று பெயர் வைக்கப்பட்டது.இரண்டு வருடங்களுக்கு முன்பு அதை தற்போது அரசியல் ஆக்குகின்றனர்.
தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் சீரழிக்கப்படவில்லை ஏனைய இனங்களின் கலாச்சாரமும் சீரழிக்கப்படுகின்றது என தெரிவித்தார்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








