ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ள பொது மக்கள் மீண்டும் கொழும்பிற்குத் திரும்புவதற்குப் போதியளவு பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஹட்டன் உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள பல பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதாக செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று பிற்பகலுக்குள் அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் பேருந்துகள் நாளை முதல் வழமை போன்று இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்துள்ளார்.








