புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய பிரிவொன்றினை ஆரம்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகில் உள்ள தனிநபர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு குற்றசெயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குறித்த பிரிவின் ஊடாக சட்டங்களை பிரயோகிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி பொலிஸ் ,இராணுவம் மற்றும் சிவில் ஏஜன்ஸிகளுடன் உள்ளடக்கியதாக குறித்த பிரிவு அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரிவு பொது ஒழுங்கு மற்றும் மோட்டார்சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் இதன்படி சிறப்பு நடவடிக்கைகள்,துணை நடவடிக்கைகள் போன்றவற்றை உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்வர்.
பயங்கரவாதத் தாக்குதல்கள், தீவிரவாத வன்முறை, பொதுமக்கள் எதிர்ப்புகள், மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் போன்றவைகளும் இந்த சிறப்புக் குழுக்களால் கையாளப்படும்.
மேலும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நாட்டை குழிபறிப்பதற்கு இடமளிக்க முடியாது எனவும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இந்த திட்டமானது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்துவதுவதற்கும் இன்றியமையாதது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப் படைக் கட்டளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.








