மட்டக்களப்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பகுதியில் நேற்றிரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரனின் தேசிய ஜனநாயக முன்னணியின் கட்சியின் வேட்பாளர் காரியாலயத்தின் முன்பாக நின்றிருந்த கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும், அங்கு வந்த வேறு கட்சியைச் சேர்ந்த குழுவொன்றுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், ஏற்பட்ட கைகலப்பின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here