பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பல ஐஸ் போதைப் பொருள் விற்பனையாளர்கள் உட்பட கசிப்பு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் 350 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி, கசிப்பு விற்பனை மற்றும் வீடு உடைத்தல் மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 44 பேரும் உள்ளடங்கலாக 59 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட இவர்கள் நேற்று (20) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.







