முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

முருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாட்டை தொடர்ந்து, தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

வர்த்தக நிலையங்கள் மற்றும் கிளிநொச்சி பொதுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் நாங்கள் பட்ட துன்பங்களிலிருந்து நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க என்றும் வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம். பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் மற்றும் தாய் தந்தையை இழந்த பலர் உள்ளனர்.

வரிசையில் பல நாட்களாக காத்திருந்தோம் .அரகல போராட்டத்தின் பின்பு நாட்டை மீட்குமாறு கோரியும் எந்தவொரு தலைவரும் பொறுப்பேற்கவில்லை துணிந்து மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் நிராகரித்த வேளையிலும் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்று நாட்டை மீட்டெடுத்த உலகத்தின் தலை சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்று தெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here