மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
38 வயது நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவருக்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
திக்கோடை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அம்பலாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றுமுந்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும் மோட்டார் சைக்கிளுடன் கீழே வீழ்ந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு வீதியால் பயணித்தவர்கள் பொலிசாருக்கு அறிவித்ததாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







