பண்டாரவளை, பூனாகலை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர், பண்டாரவளை தூல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய இளைஞன் ஆவார்.

இவர், மேலும் பலருடன் இணைந்து சுவர் ஒன்றை அமைப்பதற்காக அஸ்திவார குழியை வெட்டிக் கொண்டிருந்த போது, மேலிருந்த மண்மேடு இளைஞனின் உடல் மீது சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த இளைஞள் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here