கேகாலை, அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பொக்க பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவர் ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கல்பொக்க பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
இவர் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து வீட்டை சோதனையிட்ட போது, சடலத்தை கண்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சடலமானது கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








