தென் கொரிய விசா சம்பவத்தில் தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு ஜூன் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, இந்த மனுவின் ஏனைய பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்காமை தொடர்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, மனுதாரருக்கும் பிரதிவாதிகளுக்கும் அழைப்பாணை விடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை ஜூன் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையானார்.

கடந்த அரசாங்கத்தின் போது தென் கொரிய விசா சம்பவம் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் துறையால் தீங்கிழைக்கும் மற்றும் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here