இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் புது டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்த பெரும் பணியை ஆற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும்போது இந்திய மக்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.








