சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தனது வடமாகாணத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்று வடமாகாணத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த கால கசப்பான விடயங்களை கழைந்து இரண்டு சமூகங்களுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சார்ந்த கருத்து முரண்பாடுகளை கழைந்து எவ்வாறு கடந்த கால தலைவர்கள் செயற்பாட்டார்களோ அவ்வாறு இணைந்து செயற்படுவதுக்குமான முயற்சிகளை மீள எடுப்பதற்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வு மூன்று பக்க கோசங்களுடன் திலகர் என்ற கோஷசத்துடன் வந்துள்ளோம்.

மூன்று பக்கங்கள் என்பது தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் சகோதர சிங்கள மக்களுடன் எப்படி ஐக்கியமாக வாழலாம் என்பது எத்தகைய உடன்பாடுகளை கண்டறியலாம் என்பது நோக்கம் ஆகும் என தெரிவித்துள்ளார்.என எமதுபிராந்திய செய்தியாளார் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here