Exif_JPEG_420

வவுனியா மாவட்டம் வெங்கல செட்டிக்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட கணேசபுரம்  திருமூலர் அறநெறிப் பாடசாலைக்கான  புதிய கட்டிடம் ஒன்று இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (15.09.2024 )காலை 11:30 மணியளவில் சுப நேரத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் திருமூலர் அறநெறி பாடசாலை நிருவாகத்திடம் கட்டிடம் சம்பிர்தாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விழா மண்டபம் வரை மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மங்கல சுடர்களை பிரதம சிறப்பு விருந்தினர்கள் ஏற்றியதை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றன.

வரவேற்பு நடனம், வரவேற்பு உரையை தொடர்ந்து கருத்துரைகளை வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை இந்துகலாசார உத்தியோகஸ்தர் சி.சிவகஜன் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலக உத்தியோகத்தர் ச.ஜேந்திரன் ,சமூக செயற்பாட்டாளர் இ. தாயபாரன்,  உட்பட பலரும் சிறப்புரை ஆற்றினர்.

அதேவேளை ரூபா  175,000  பெறுமதியான தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு தலா 10kg வீதம் அரிசியும் வழங்கிவைக்கப்பட்டன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Exif_JPEG_420
Exif_JPEG_420

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here