தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இடமாற்றப்பட்டவர்களில், எல்.எம்.எஸ். பண்டார குருநாகல் பிரிவுக்கு, ஏ.ஜி.யூ.சி. ஹேரத் தலைமையக நிர்வாகத்திற்கு, எஸ்.பி.கே. கால்லகே நலன்புரி பிரிவுக்கு, ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த தம்புத்தேகம பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.








