பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையில் நேற்றைய தினமும், இன்றய தினமும் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது
இதனால் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் பொதுச்சந்தைக்கு வருகைதரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பச்சிளப்பள்ளி பொதுச்சந்தை ஆனது தற்போது புரணரமைப்பு வேலைகள் நடைபெறுவதோடு ஆங்காங்கு கட்டிட பொருட்கள் குவித்த வண்ணமும் மணல் குவித்த வண்ணமும் இருப்பதாகவும் இவ்வேலை திட்டங்களை மிக விரைவில் நிவர்த்தி செய்து தருமாறும் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.
பல காலமாக தாம் இப்ப பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகவும் தமது பிரதேசத்தில் சிறிய அளவு மழை பெய்தாலும் பொதுச் சந்தை காணப்படும் பிரதேசத்தில் தாம் தமது அன்றாட செயல்பாடுகளை தொடர இடையூறாக இருப்பதாகவும் வெள்ளத்தினை கட்டுப்படுத்த ஏதாவது உடனடி நடவடிக்கையை செய்து தருமாறும் மக்கள் கேட்டு நிற்கின்றனர்.









